25.4 C
Colombo
Wednesday, December 12, 2018
முகப்பு News Local News சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் புதன்கிழமை வெளிவரவுள்ளது

சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் புதன்கிழமை வெளிவரவுள்ளது

சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்

சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் புதன்கிழமை வெளிவரவுள்ளது. முதல் முறையாக இறுவெட்டு மூலமும் பாடசாலைகளுக்கு வழங்க ஏற்பாடு.

கடந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 6 இலட்சத்து 88 ஆயிரம் பேரின் பெறுபேறுகளை புதன்;கிழமை 28.03.2018; வெளியிடப்போவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அன்றையதினம் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

பரீட்சைப் பெறுபேறுகள் அன்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சேர்க்கப்படும்.

மறுதினம் வியாழக்கிழமை (29) கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு இப்பெறுபேறுகள் விநியோகிக்கப்படும்.

கொழும்புக்கு வெளியே உள்ள ஏனைய பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இம்முறை முதன் முறையாக இந்தப் பெறுபேறுகள் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இறுவெட்டு மூலம் வழங்குவதற்கு ஏற்ற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]