சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வியாழனன்று வெளியீடு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வரும் வியாழக்கிழமை (28) வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் தற்பொழுது இடம்பெற்று வருவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகி 12 ஆம் திகதிவரை நடைபெற்றது.

6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]