இன்று இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு, சாணக்கியர் கூறுவது என்ன?

மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்த மௌரியனின் முதன்மை அமைச்சராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் சாணக்கியர். இவர் மௌரியப் பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர். கவுடில்யர், விட்ணுகுப்தர் என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். ஈடற்ற அரசியல் இலக்கியமான அர்த்தசாத்திரத்தைப் படைத்தவர் இவரேயாவார்.

ஒரு ராஜ்யத்தின் முக்கிய அங்கம் அரசனாவான். அரச இயந்திரத்தை சிறப்புறச் செலுத்தும் நற்சாரதி அவனே. அரசனை ‘சுவாமி’ என்கிறார் கௌடில்யர். இத்தகு சுவாம ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி சாணக்கியர் யாது சொல்கின்றார் என்று பார்ப்போமா???

அரசன் என்பவன் சமூகத்தினதும் அறத்தினதும் காவலன். அறத்தைக் காத்து மக்களது பாதுகாப்பான நலவாழ்க்கைக்கு வழி செய்பவனே சுவாமி.

tamil kings

அரசன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய நற்பண்புகள்!

01 ஒழுக்கம், தர்மம், நீதி என்பவற்றைக் கைக்கொளள் வேண்டும்.

02 சிறந்த கல்விமானாக இருகக் வேண்டும். அனைத்துத் துறைகள் சார்ந்தும் அறிவைப் பெற்றிருக் வேண்டும்.

03 பிறர் சொத்துக்குத் துராசை கொள்ளக் கூடாது.

04 அகிம்சையைக் கடைப்பிடிகக் வேண்டும்.

05 மாற்றான் மனைவியரின் உறவை விலக்க வேண்டும்.

06 பெரியோரின் அறிவுரை கேட்டல்   வேண்டும்.

07 சுயகட்டுப்பாடு (ஆத்ம விரதா) வேண்டும்.

08 வீரம், நேர்மை, உண்மை, மனவுறுதி, ஆர்வம், நன்றி பாராட்டல் எனப் பல நற்பண்புகள் கொண்டிருக் வேண்டும்.

09 பொருளாதாரத்தை நிர்வகிக்க சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும்.

10 உயர் செயல் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

சுவாமி ராஜ்யப் பிரஜைகளின் தந்தையாக(பிதாவாக) செயற்பட வேண்டும். இதனை மனதிற் கொண்டே இராஜ்யப் பரிபாலனம் செய்ய வேண்டியது.

பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் காப்பதுடன் சட்டத்தையும் ஆணையையும் பரிபாலித்து தர்மத்தைக் காப்பது சுவாமியின் தார்மீகக் கடமையாகும்.

ஒரு அரசனானவன் நாளாந்தம் கைக்கொள்ள வேண்டிய கடமைகளாக சாணக்கியர் பரிந்துரைப்பவை!

 • அரசன் பகல், இரவு ஆகிய ஒவ்வொன்றையும் ஒன்றரை நேரமுடைய எட்டுச் சமபருவங்களாகப் பகுத்து கடமைகளை ஆற்ற வேண்டும்.
 • ஞாயிறு உதித்த பிறகான முதல் 1½ மணி நேரங்களில் – பாதுகாப்பு, வருவாய் மற்றும் செலவினம் பற்றிய அறிக்கைகளைப் பெற வேண்டும்.
 • ஞாயிறு உதித்த பிறகான இரண்டாம் 1½ மணி நேரங்களில் – பொது மக்களைக் காணுதல், நகர மற்றும் நாட்டு மக்களிடம் குறைகளைக் கேட்டல்.
 •  ஞாயிறு உதித்த பிறகான 1½ மணி நேரங்கள் மற்றும் நண்பகலிற்கு முந்தைய கடைசி 1½ மணி நேரங்கள் –
 • வருவாய்களையும் கப்பம் மற்றும் திறைகளையும் பெறுதல். அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை நியமித்தல். அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்தல்.
 • நண்பகலுக்குப் பிறகான முதல் 1½ மணி நேரங்கள் – கடிதம் எழுதுதல் மற்றும் அனுப்புதல். அரசவை உறுப்பினருடன் கலந்தாலோசித்தல், ஒற்றர்கள் மூலம் இரகசியத் தகவல்களைப் பெறுதல்.
 • நண்பகலுக்குப் பிறகான இரண்டாம் 1½ மணி நேரங்கள் – அரசனின் தனிப்பட்ட நேரம்; மனமகிழ மற்றும் ஆழ்ந்து சிந்திப்பதற்கான நேரம்.
 • நண்பகலுக்குப் பிறகான மூன்றாம் 1½ மணி நேரங்கள் மற்றும் ஞாயிறு மறைவதற்கு முன்னதான 1½ மணி நேரங்கள் படைகளை மேற்பார்வையிடுதல் மற்றும் மீள்பார்வை செய்தல். தளபதியுடன் ஆலோசித்தல்.
 • நாள் பொழுது மாலை இறை வணக்கங்களுடன் முடிவடைய வேண்டும்.
 • ஞாயிறு மறைந்த பின்னரான முதல் 1½ மணி நேரங்கள் – உளவாளிகளுடன் நேர்முகம்.
 • ஞாயிறு மறைந்த பிறகான இரண்டாம் 1½ மணி நேரங்கள் – அரசனின் தனிப்பட்ட நேரம்; குளிக்க, உணவருந்த மற்றும் வாசிக்கும் நேரம்.
 • ஞாயிறு மறைந்த பிறகான மூன்றாம் மற்றும் நான்காம் 1½ மணி நேரங்கள் ,மற்றும் நள்ளிரவிற்குப் பிறகான முதல் 1½ மணி நேரங்கள் – படுக்கையறைக்குத் திரும்பி இசை ஒலிகளைக் கேட்டபடி உறங்கப் போதல்.
 • நள்ளிரவிற்குப் பிறகான இரண்டாம் 1½ மணி நேரங்கள் – இசையின் ஒலி கேட்டு எழுந்தப் பிறகு, அரசியல் மற்றும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆழ்ந்து சிந்தித்தல்.
 • நள்ளிரவிற்குப் பிறகான மூன்றாம் 1½ மணி நேரங்கள் – அரசவை உறுப்பினர்களுடன் ஆலோசித்தல், ஒற்றர்களை அனுப்புதல்.
 • ஞாயிறு எழுவதற்கு முந்தைய கடைசி 1½ மணி நேரங்கள் – மதம் சார்ந்த, இல்லம் சார்ந்த மற்றும் தனிப்பட்டக் கடமைகளைச் செய்தல். குருவைச் சந்தித்தல், சடங்கு ஆலோசகரைச் சந்தித்தல், புரோகிதர்களைச் சந்தித்தல்,
 • தனிப்பட்ட மருத்துவரைச் சந்தித்தல், தலைமை சமையற்காரர் மற்றும் ஆரூடக்காரரைச் சந்தித்தல்.

கோன் எவ்வழியோ அவ்வழி குடிகளும். அரசன் ஆற்றலுடையவனாக இருப்பின் குடிகளும் அதே அளவிற்கு இருப்பார்.

அரசன் தனக்குக் கீழ் இயங்கும் பணியாளர்களை மட்டும் நம்பியிராது, தான், மாறுவேடம் பூண்டு நாட்டின் நிலைமையை கண்காணிக்க வேண்டும். அப்போதே இராஜியத்தின் நிதர்சனம் குறித்து தானே அறிய முடியும்.

கொளடில்யர் அரசன் பற்றிக் கூறிய இத்தகு விடயங்கள் தற்கால அரசியலில் வேண்டப்படும் ஒன்றே என்பது மறுக்க முடியாத உண்மை.