‘சவூதி’யில் இலங்கை பணிப்பெண் படுகொலை

‘சவூதி’அரேபியாவில் பணிந்புரிந்து வந்த இலங்கை பணிப்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பணிபுரிந்த வீட்டின் எஜமானால் இந்தப் பெண்  கொலைசெய்யப்பட்டுள்ளார். பெண்ணின் கொலையை அடுத்து, எஜமான் தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குறித்த நபர் துப்பாக்கில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் சவூதி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.