சவுதி யுவதியின் சடலம் மகாவலி ஆற்றில் மீட்பு

சவுதி அரேபியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரின் சடலம் மகாவலி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாவலி ஆற்றில் பயணித்த படகொன்று கவிழ்ந்ததை அடுத்து, காணாமல் போயிருந்த யுவதியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவியான 24 வயதுடைய ஒருவரே இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வரதென்ன பகுதியில் மகாவலி ஆற்றில் இருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த சவுதி அரேபிய பிரஜைகள் 7 பேர் அடங்கிய குழுவினர் பயணித்த படகொன்று நேற்றைய தினம் விபத்துக்கு உள்ளானது

இதன் போது, நீரிழ் மூழ்கிய 7 பேரில் 6 பேர் நேற்றைய தினம் காப்பற்றப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, காணாமல் போன யுவதியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]