சவுதி அரேபியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி

சவுதி அரேபியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி

சவுதி அரேபியாவிற்கும் லெபனானிற்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு சவுதி அரேபியா சென்றுள்ளார்.

தமது உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்து லெபனான் பிரதமர் சாட் ஹரிரீ (Saad uariri) தமது பதவியில் இருந்து நேற்று விலகிய நிலையில் இவரது விஜயம் இடம்பெற்றுள்ளது.

சவுதி அரேபியாவும் ஈரானும், லெபனானின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது.

பிரான்ஸ் ஜனாதிபதி நேரடியாக சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொகமட் பின் சல்மனை சந்தித்து உரையாடவுள்ளார்.

நேருக்கு நேராக இரு தலைவர்களுக்கும் இடையே இடம்பெறும் இந்த பேச்சுவார்த்தையின் போது, லெபனானின் ஸ்திரத்தன்மை பேணப்படுவதுடன், அரசியல் தலைவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு ஏதுவான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது உலக மகா யுத்தத்திற்கு முன்னர் லெபனான், பிரெஞ் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது.

உலக மகாயுத்தத்திற்கு பின்னர் லெபனானுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

அன்றில் இருந்து இன்று வரை பிரான்சும் லெபனானும், சிறந்த ராஜதந்திர உறவினை கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]