சவுதிஅரேபியா போன்று நாமும் மதுபானத்தை முற்றாகத் தடை செய்யவேண்டும் – மங்கள சமரவீர

சவுதிஅரேபியா போன்று நாமும் மதுபானத்தை முற்றாகத் தடை செய்யவேண்டும் – மங்கள சமரவீர

சவுதிஅரேபியா போன்று நாமும் மதுபானத்தை முற்றாகத் தடை செய்வோம் அல்லது குறைந்த போதையுள்ள பியர் போன்ற பானங்களை நாட்டில் அறிமுகம் செய்வோம் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

சவுதி அரேபியாவைப் போன்று, கை வெட்டுவது, கால் வெட்டுவது, கழுத்து வெட்டுவது போன்ற சட்டங்களை இங்கும் கொண்டுவர வேண்டும்.
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு ஜே.வி.பி. யின் சுனில் ஹதுன்னெத்தி எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

சீனி விலை அதிகரிக்கப்பட்டமைக்கு நோயைக் காரணம் காட்டி நியாயம் கூறினார். பியருக்கு சாதாரண பானங்களை விடவும் சீனி அதிகளவு பயன்படுத்தப்படுகின்றது. அப்படியிருந்தும் பியருக்கான வரி நீக்கப்பட்டுள்ளது ஏன்? என ஹதுன்னெத்தி எம்.பி. வினவியதற்கே அமைச்சர் மங்கள இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடாத்திய ஆய்வொன்றின் படி,

நாட்டில் 49 வீதமானவர்கள் கசிப்பு குடிப்பதாகவும், சாதாரண மதுபானம் பயன்படுத்துபவர்களில் 84 வீதமானவர்கள் அரக்கு ரக மதுபானத்தைப் பயன்படுத்துகின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் 80 வீதத்துக்கும் அதிகமானவர்கள் பியரே குடிக்கின்றனர். இதில் தான் போதை ஏற்படுத்தும் தன்மை குறைவாகவுள்ளது. இதற்காகவே பியருக்கான வரியை நீக்கினோம். சிறியளவில் மதுபானம் அருந்துவது தவறில்லையென்பதே எனது நிலைப்பாடு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]