சவுக்கடி இளம்தாய் மகன் இரட்டைக் கொலை 3 பேர் கைது

  • சுமார் 20 பேரிடம் விசாரிப்பு
  • 9 பேரிடம் வாக்குமூலம் பதிவு
  • 3 பேர் கைது
  • கொலைகளுக்குப் பயன்படுத்திய கோடரி மீட்பு

மட்டக்களப்பு சவுக்கடி தாய் மற்றும் மகன் ஆகிய இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டதாக இதுவரை 20 இற்கு மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும் 9 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதாகவும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூன்று பேரை 24 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழஙகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு சுமார் 150 மீற்றர் தொலைவில் புதர்கள் நிறைந்த பகுதியில் இருந்து உடைந்த நிலையில் கோடரி ஒன்றினையும் மீட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடயவியல் பொலிஸார் மற்றும் ஏறாவூர் பொலிஸார்இ மோப்ப நாய்ப் பிரிவு ஆகிய பொலிஸ் குழுக்கள்இ இணைந்து தேடுதலை நடத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் தொடர்ச்சியான விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.

கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக எறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் (வயது 11) ஆகியோர் செவ்வாய்கிழமை (17.10.2017) இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.