சவுக்கடி இரட்டைப் படுகொலை குற்றவாளிகள் சார்பாக எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராக வேண்டாம் – பிரதேச கிராமக்கள்

சவுக்கடி இரட்டைப் படுகொலை குற்றவாளிகள் சார்பாக எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராக வேண்டாம் – பிரதேச கிராமக்கள்.

சவுக்கடி இரட்டைப் படுகொலை

மட்டக்களப்பு சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்தும் குற்றவாளிகள் சார்பாக எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராக வேண்டாம்” எனக்கோரி பிரதேச கிராமக்கள் திங்கட்கிழமை 13.11.2017 ஆறுமுகத்தான் குடியிருப்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சவுக்கடி இரட்டைப் படுகொலை

ஆறுமுகத்தான்குடியிருப்பு கிராமத்தில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்திலும் கண்டனப் பேரணியிலும் சவுக்கடி, ஆறுமுகத்தான்குடியிருப்பு, மயிலம்பாவெளி, தன்னாமுனை உள்ளிட்ட அயற் கிராமங்களிலுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அங்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில் “சவுக்கடி இளம் தாய் மற்றும் இரட்டைப் படுகொலையில் பொலிஸாரும், விஷேட புலனாய்வு பிரிவினரும் கொலைகாரர்களை மிகவும் கஷ்டப்பட்டு பிடித்தார்கள். உணவு கூட உண்ணாமல் அவர்களது பணியை மிகவும் மிகவும் சிறப்பாக செய்தார்கள். ஆனால் குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் ஒரு சில சட்டத்தரணிகள் முயல்வது மிகவும் கவலைக்குரியதே.

சவுக்கடி இரட்டைப் படுகொலை

கொலைகாரர்களுக்குச் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாது, அதேவேளை கொலைவயாளிகளுக்கு அதிகூடிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஈவிரக்கமற்ற படுகொலைகளைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியருகே ஆறுமுகத்தான்குடியிருப்புப் பகுதியில் அமைதியான முறையில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தின்போது பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

சவுக்கடி இரட்டைப் படுகொலை

இப்படுகொலையின் பிரதான இரு சந்தேக நபர்கள் படுகொலை இடம்பெற்ற வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களடன் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுக்கடி இரட்டைப் படுகொலைசவுக்கடி இரட்டைப் படுகொலைசவுக்கடி இரட்டைப் படுகொலைசவுக்கடி இரட்டைப் படுகொலைசவுக்கடி இரட்டைப் படுகொலை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]