சவுக்கடி இரட்டைக் கொலை சந்தேக நபரது வீட்டிற்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சவுக்கடி இரட்டைக் கொலை சந்தேக நபரது வீட்டிற்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

சவுக்கடி இரட்டைக் கொலை

கைதுசெய்யப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராக வேண்டாம் மேலும் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் தனது வீட்டை விற்றுவிட்டு வழக்குப்பேசுவதற்குத் திட்டமிட்டுள்ளதனால் அந்த வீட்டை எவரும் வாங்கவேண்டாம் கொலையாளிக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதுவும் ஆர்ப்பாட்டக்காரர்களது கோரிக்கைகளாகும். ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோகங்களை ஏந்தியவண்ணம் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

சவுக்கடி இரட்டைக் கொலை

சட்டத்தரணிகளே கொலையாளிகள் சார்பில் ஆஜராக வேண்டாம், அரசினால் வழங்கப்பட்ட காணி வீடுகளை விற்று கொலையாளிகளை காப்பாற்ற முயலாதே, சட்டத்துறையே கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கு, காவல்துறையே கொலையாளிகளைப் பிடித்ததுபோல் விரைவாக தண்டனை வழங்க உதவுங்கள் என்ற வாசகங்கள் எழுதி பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

சவுக்கடி பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 27 வயதுடைய பீதாம்பரம் மதுவந்தி மற்றும் அவரது மகன் 11 வயதுடைய மதுர்சன் ஆகியோர் கடந்த 17.10.2017 தீபாவளி தினத்திற்கு முந்திய நாள் இரவு கொள்ளையர்களினால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

சவுக்கடி இரட்டைக் கொலை

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் சவுக்கடி பிரதேசத்தைச்சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் யாழ்ப்பாணம் – கொடிகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவ்வீட்டில் கொள்ளையிட்டு யாழ்ப்பாணத்தில் அடகு வைக்கப்பட்ட தங்க ஆபரணங்களும் பொலிஸ் புலனாய்வுப்பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை இதுபோன்ற சம்பவம் எங்கும் இனிமேல் நடக்கக்கூடாது என்றும், கொலையாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

சவுக்கடி இரட்டைக் கொலைசவுக்கடி இரட்டைக் கொலை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]