சல்மான்கானினால் 800 கோடிக்கு சினிமா வர்த்தகம் பாதிப்பு!

பாலிவுட் நடிகா் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் ரூ.800 கோடி வரையிலான சினிமா வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சினிமா வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் மீது, கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது, மான் வேட்டையாடிதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில், நடிகா்கள் சல்மான்கான், சைப் அலி கான், தபு, சோனாலி, பிந்த்ரே, நீலம் ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜோத்பூா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டது. சல்மான்கானுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த சிறை தண்டனையால், சல்மான் கானை நம்பி பணம் முதலீடு செய்துள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் தாங்கள் போட்ட பணத்தை திரும்ப எடுக்க முடியுமா என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]