சல்மானுக்கு உண்மையிலேயே அடி விழுந்ததா?

பிக் பஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை பொலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒரு வீட்டில் இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் 60 நாட்கள் தங்க வேண்டும்.

இவர்களை 24 மணி நேரமும் வீடியோ கேமரா கண்காணித்துக் கொண்டே இருக்கும்.
இந்த நிகழ்ச்சியில், சாமியார் ஸ்வாமி ஓம் கலந்துகொண்டார். தொடக்கத்தில் இருந்தே ரகளையில் இருந்த ஸ்வாமி, கூட இருந்த போட்டியாளர்கள் மேல் சிறுநீர் கழிக்கவே, அவரை இந்த போட்டியிலிருந்து வெளியேற்றினார் சல்மான்.

அதன்பின், மற்றொரு தொலைக்காட்ச்சிக்கு பேட்டி கொடுத்த ஸ்வாமி, பிக் பஸ் நிகழ்ச்சி வீட்டில், சிகரெட் பிடிக்கும் அறையில் விட்டேன் பாருங்க சல்மானுக்கு ஒரு அறை” என்று சொல்லியுள்ளார்.

அவர் மீடியாவின் முன்னால் பெரிய பெயர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இப்படி பல செய்திகளை அள்ளி வீசுவாராம். அது போல தான் இதுவும் என்கிறார்கள்.