சற்று முன்னர் வெளியான உயர்நீதிமன்றத் தீர்ப்பு!

அனைவரும் எதிர்பார்த்த நீதிமற்ற தீர்ப்பு சற்று முன்னர் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்கரை வருடங்கள் முடிவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும் அவ்வாறு கலைக்க வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டமை அடிப்படை உரிமை மீறல் எனவும் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என ஏகமனதாக தீர்மானித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்கி தீர்ப்பளித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]