சற்றுமுன்னர் அலரி மாளிகையில் பெரும் பதற்றநிலை- நிலைமையை கட்டுப்படுத்திய பாதுகாப்பு அதிகாரிகள்

பதவி நீக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டில் உள்ள அலரி மாளிகை பகுதியில் சற்று நேரத்துக்கு முன் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

அலரி மாளிகைக்குள் மகிந்த தரப்பை சேர்ந்தவர்கள் என தம்மை அடையாளப்படுத்தி கொண்ட இருவர் நுழைந்து அங்கிருக்கும் உபகரணங்கள் மற்றும் சில பொருட்களை சோதனை செய்து அவற்றை அங்கிருந்து அகற்ற முயன்றுள்ளனர்.

இதனையடுத்து அவர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை உருவாக்கியது.

உடனடியாக இதில் தலையிட்ட அலரி மாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் நிலைமையை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

இலங்கை பிரதமரின் உத்தியகபூர்வ வாசஸ்தலமாகிய அலரி மாளிகையை விட்டு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்பு வெளியேற மறுப்பு தெரிவித்து அங்கு தங்கியுள்ளனர்.

இவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு புதிய பிரதமர் மகிந்தவின் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்து காட்டும் வரை அங்கிருந்து வெளியேறபோவதில்லை என ரணில் தரப்பு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]