சர்வாதிகார முறையை ஒழிப்பதே எமது நோக்கம்: ஜே.வி.பி

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பின்னர் தெரிவாகும் ஜனாதிபதி பெயரளவிலான ஜனாதிபதியாக இருக்க மாட்டார் என, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரவுள்ள 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து தெளிவுப்படுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றது.

அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், “சர்வாதிகார, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதே 20ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம்

மக்கள் விடுதலை முன்னணி கடந்த 1978ஆம் ஆண்டு முதல் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்பது தெளிவான நிலைப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த கொள்கைக்கு அமையவே 20ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த திருத்தச் சட்டம் குறித்து பல தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

உண்மையில் இது சிறந்த கலந்துரையாடல். அதேபோல் மற்றவர்களுக்கு தமது கருத்துக்களை வெளியிடும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம்.

எனினும் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அப்படியான கருத்துக்களை முன்வைக்கும் போது அது தர்க்க ரீதியாக இருக்க வேண்டும். கருத்துக்களை முன்வைக்கும் பலவருக்கு 20ஆவது திருத்தச் சட்டம் எப்படி இருக்கும் என்பது தெரியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]