சர்வர் சுந்தரம் (Server-Sundaram) ஆட்டத்துக்கு ரெடி!

(Server Sundaram) ஆனந்த் பல்கி இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் சர்வர் சுந்தரம்  இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மராத்தி பட நடிகை வைபவி சண்டில்யா நடிக்க, மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் மற்றும் ஆனந்த்ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.மேலும், நாகேஷ்க்கு சர்வர் சுந்தரம் மெகா ஹிட்டாக அமைந்தது போன்று இந்த படமும் தனக்கு ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கும் சந்தானம்,

இந்த படத்திற்கு பரபரப்பு கூட்ட வேண்டும் என்பதற்காக தற்போது டீசரை சிம்பு, மாசி மாதம் 3ஆம் திகதி வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார்.

ஆக, சிம்பு படங்களின் டீசரை இணையதளங்களில் அவரது ரசிகர்கள் ட்ரன்டாக்கி வருவது போன்று இப்போது சந்தானம் பட டீசரையும் பிரபலப்படுத்துவார்கள் என்று தெரிகிறது.