சர்வமத வழிப்பாடுகளில் ஈடுபட்ட பிரதமர் ரணில் விக்கரமசிங்க

40 ஆண்டு நாடாளுமன்ற அரசியல் பிரவேசம் நிறைவையொட்டி வரவேற்பு நிகழ்வு ஒன்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று ஹட்டன் நகருக்கு விஜயத்தை மேற்கொண்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 40ஆண்டு நாடாளுமன்ற அரசியல் பிரவேசம் நிறைவையொட்டி ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் ஏற்பாட்டில் இந்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலும், நீக்ரோதாரராம பௌத்த விகாரையிலும், ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலிலும் இடம்பெற்ற விசேட பூஜைகளில் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அத்தோடு ஹட்டன் டிப்போவால் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள ஹட்டனிலிருந்து மட்டகளப்புவிற்கான பஸ் சேவையையும் ஆரம்பித்து வைத்தார். அதன்பின் மக்களை சந்திக்கும் முகமாக டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்விற்கு நாட்டின் பிரதமர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.கே.பியதாஸ, வடிவேல் சுரேஷ், லக்கி ஜெயவர்த்தன ஆகியோருடன் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]