சர்வதேச வெசாக் தினத்தை கோலாகலமாக நடத்துவதற்கு புத்தசாசன அமைச்சு நடவடிக்கை

சர்வதேச வெசாக் தினத்தை கோலாகலமாக நடத்துவதற்கு புத்தசாசன அமைச்சு நடவடிக்கை

ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் விழாவை கோலாகலமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவால் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் சந்திரபிரேம கமகே தெரிவித்துள்ளார்.

வெசாக்

ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் குழுவால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த விழாவின் ஆரம்ப வைபவம் மே மாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்தியப் பிரதமர் ஆகியோர் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிலையான உலக சமாதானத்திற்கும், நியாயமான சமூகத்திற்கும் பௌத்த தர்மம் என்ற தொனிப் பொருளில் இம்முறை சர்வதேச வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ளது.

இலங்கையில் நடைபெறும் 14ஆவது சர்வதேச வெசாக் வைபவத்தை வெகு விமர்சையாக நடத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும். அன்றைய தினம் சர்வதேச விடுமுறை தினமாக முன்மொழியும் யோசனையை நிறைவேற்ற புத்தசாசன அமைச்சு திட்டமிட்டுள்ளது. மே மாதம் 13ஆம் திகதி மாநாடொன்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் மஹாநாயக்கர்களும், 85 நாடுகளைச் சேர்ந்த மஹா சங்கத்தினருமாக 750 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]