சர்வதேச விருது பெற்றுள்ள ‘தங்கமீன்கள்’ பட செல்லம்மா…

சர்வதேச விருது பெற்றுள்ள ‘தங்கமீன்கள்’ பட செல்லம்மா…

ராம் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான படம் ‘தங்கமீன்கள்’. இதில் ராம் கதையின் நாயகனாகவும் அவரின் மகளாக சாதனாவும் நடித்திருந்தார்.

அப்பா – மகளுக்கு இடையேயான பாசத்தை மையமாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்றது என்றால் அது மிகையாகாது.

செல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த சாதனாவின் நடிப்பு இப்படத்தில் பெரிதும் பேசப்பட்ட நிலையில், அவர் மீண்டும் ராம் இயக்கத்தில் உருவாகி பேரன்பு படத்திலும் நடித்திருக்கிறார்.

இப்படம் பல்வேறு விருதுக்கு தேர்வாகி உள்ளதை தொடர்ந்து சாதனா, சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடும் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான ‘டயானா விருது’ வென்றிருக்கிறார்.

இதனை இயக்குனர் ராம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது மட்டுமன்றி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]