சர்வதேச மரதான் போட்டியை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம்

நாளையதினம் கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச மரதன் போட்டியை முன்னிட்டு நாளை அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான நேரப் பகுதியில் கொழும்பின் சில வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டை சைத்திய வீதி, காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் இருந்து கொள்ளுபிட்டி சந்தி வரையான வீதி மற்றும் கொள்ளுபிட்டியில் இருந்து வெள்ளவத்தை வரையிலான கொழும்பு திட்ட வீதி (Marine Drive) ஆகிய வீதிகளே மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.