சர்வதேச மகளீர் தின நிகழ்வு யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

“அவள் இல்லாத உலகம்” எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மகளீர் தின நிகழ்வு இன்று (08) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையில் மதியம் 2.30 மணியளில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரே கலந்து சிறப்பித்தார்.

நிலையான எதிர்காலத்திற்கு வலுவான பெண்கள் மற்றும் முறைசாரா பொருளாதார துறையிலுள்ள பெண்களை வலுவூட்டல் எனும் கோட்பாட்டிற்கு அமைவாக 2018 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளீர் தினம் கொண்டாடப்பட்டது.

இதன்போது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முறைசாரா பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு அடங்கிய நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதன் முதற்பிரதியினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரேயிக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளார் இ.இளங்கோவன், உள்ளிட்டோருக்கான சிறப்பு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், மத தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், மகளீர் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள், சமூக ஆர்வலர்கள், பெண் தலைமைத்துவ பெண்கள், உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]