சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மிச்செல் ஜோன்சன் அறிவிப்பு

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜோன்சன் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

உடல்உபாதைகள காரணமாகவே அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், என்னுடைய விளையாட்டு முடிவிற்கு வந்துவிட்டது நான் இறுதிபந்தை வீசிவிட்டேன், இன்று எனது இறுதி விக்கெட்டை கைப்பற்றிவிட்டேன் இதனால் அனைத்து வகையான சர்வதேசப்போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகின்றேன் என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘தற்போது அனைத்தும் முடிவிற்கு வந்துவிட்டது, 2013-14 ஆசஸ் மற்றும் தென்னாபிரிக்காவில் சதம் பெற்றமையே எனது நினைவில் உள்ள மிகச்சிறப்பான விடயங்கள்.
நான் ஏனைய பல வீரர்களை விட உயர்வையும் தாழ்வையும் சந்தித்துள்ளேன்.

என்னால் நெருக்கடியான தருணங்களில் எதிர்த்து போராட முடிந்தமை குறித்தும் காயங்களின் பின்னரும் அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட முடிந்தது குறித்தும் நான் பெருமைப்படுகின்றேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்தவருடம் வரை லீக்போட்டிகளில் விளையாட எண்ணியிருந்தாக கூறிய அவர், உடல் ஒத்துழைக்க மறுப்பதாகவும், இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் உடல்உபாதைகளை எதிர்கொண்ட போது, தான் முற்றாக ஓய்வு பெறவேண்டும் என்ற முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் ஒரு நாள் மற்றும் ரி20 போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த ஜோன்சன் லீக் போட்டிகளில் விளையாடிவந்தார். 2016-17 பிக்பாஸ் லீக்கில் சிறப்பாக விளையாடிய அவர் பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு காரணமாகயிருந்தார். மேலும் ஜோன் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியிருந்தார்.

2005ஆம் ஆண்டு நியுசிலாந்திற்கு எதிரான தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த மிச்செல் ஜோன்சன் 590 சர்வதேச விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

313 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவர் 2013-14 ஆசஸ் தொடரில் மிகவும் அற்புதமாக பந்து வீசி 37 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

தனது அதிவேகப்பந்து வீச்சின் காரணமாக 2015 உலக கோப்பையை அவுஸ்திரேலியாவிற்கு பெற்றுக்கொடுத்த மிச்செல் ஜோன்சன் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]