சர்வதேச பொலிஸாரால் விடுதலை – உதயங்க வீரதுங்க

சர்வதேச பொலிஸாரின் அனுமதியுடன் தான் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றச்சாட்டின்மை மற்றும் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்படாமை உறுதி செய்யப்பட்டதால் தன்னை சர்வதேச பொலிஸார் விடுவித்ததாக அவர் கூறியுள்ளார்.

உதயங்க வீரதுங்க, அமெரிக்கா நோக்கி பயணிக்கிவிருந்த நிலையில் டுபாய் விமான நிலையத்தில் வைத்து கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக சிறப்பு பொலிஸ் குழுவொன்று டுபாய் நோக்கி பயணமாகியிருந்தத.

இந்நிலையில், அவர் இந்த பதிவை முகப்புத்தகத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]