சர்வதேச தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு கிராம மட்ட மக்களுக்கான விசேட நடமாடும் சேவை

சர்வதேச தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு கிராம மட்ட மக்களுக்கான விசேட நடமாடும் சேவை

யாழ்ப்பாணம்; சர்வதேச தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு கிராம மட்ட மக்களுக்கான விசேட நடமாடும் சேவை இன்று (24) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் “கிராமத்திற்கான தகவல் உரிமை” எனும் தொனிப்பொருளில் மக்களுக்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், இந்த நடமாடும்சேவை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (24) நடைபெற்றுத.

நடமாடும் சேவையினை நிதி மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திலகா ஜெயசுந்த பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இலங்கையில் கடந்த வருடம் சட்டமாக அமுலாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பயன்களை கிராம மட்டத்தில் உள்ளவர்கள் பெற்றுக்கொள்ளும் விதமாக இடம்பெற்ற இந்த நடமாடும் சேவையில் உண்மையான தகவல்களை பெற்றுக்கொள்ளுதல்,ஊழலை தடுத்தல்,காணி தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளுதல், காணாமல் போனவர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் இறந்தவர்களின் விபரங்களை சமூக மட்டத்தில் உள்ளிடுதல் மற்றும் சகலரும் பெற்றுக்கொள்ளுதல் என்ற ஐந்து அம்சங்களை பிரதானமாக கொண்டு இந்த நடமாடும் சேவை இடம்பெற்றது

கிராம மட்ட பொதுமக்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள்,இளைஞர் யுவதிகள் என பெரும்பாலானவர்கள் இதில் பயனாளிகளாக கலந்துகொண்டதுடன் இவர்களுக்கு தகவல் உரிமைச்சட்டம் தொடர்பான விளக்கங்களை துறைசார் வல்லுனர்களான யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ரகுராம் சட்டத்தரணி.கே.ஐங்கரன் மற்றும் கொழும்ப பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி பிரதீப் வீரசிங்க ஆகியோர் வழங்கினர்.

அரச தகவல் திணைக்களத்தின் இயக்குனர் சுதர்சன குணவர்தன நிதி மற்றும் ஊடக அமைச்சின் பிரதி செயலாளர் செல்வி சுதர்மா குணரட்ண, சேதிய ஊடக வலையத்தின் இயக்குனர் ஜெகத் லியனராசாச்சி யாழ் மாவட்டஅரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நடமாடும் சேவை நடமாடும் சேவை நடமாடும் சேவை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]