சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை: ரியல் மாட்ரிட் வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி

சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பைக்கான கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணியை 4-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி.

கால்பந்து அணிகளுக்கு இடையிலான முன்னணி லீக் தொடர்கள் இன்னும் ஆரம்பமாகவில்லை. இந்த தொடர்கள் நடைபெறுவதற்கு முன்பாக தற்போது அணிகளுக்கு இடையிலான சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.

சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை

நட்பு ரீதியான இந்த தொடரில் இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட், இங்கிலீஷ் பிரிமீயர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டி அணியை எதிர்கொண்டது.

இரு அணி வீரர்களும் சிறப்பான ஆடிய போதிலும் முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளாலும் கோல்கள் அடிக்க முடியவில்லை. ஆனால் 2-வது பாதி நேரத்தில் மாஸ்செஸ்டர் சிட்டி அணி வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் மழை பொழிந்தனர்.

சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை

ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் ஒஸ்டாமெண்டி, 59-வது நிமிடத்தில் ஸ்டெர்லிங் 59, 67 நிமிடத்தில் ஸ்டோன்ஸ், 81-வது நிமிடத்தில் பிராஹிம் டயாஸ் அடுத்தடுத்து கோல் அடித்தனர்.

ஆட்டத்தின் கடைசி நிமிடமான 90-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் ஆஸ்கர் ஆறுதல் கோல் அடித்தார். இதனால் மான்செஸ்டர் சிட்டி 4-1 என ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியை ருசித்துள்ளது.

மற்றொரு போட்டியில் பார்சிலோனா 1-0 என மான்செஸ்டர் யுனைடெட் அணியையும், யுவான்டர் பிஎஸ்ஜி அணியை 3-2 எனவும் வீழ்த்தியது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]