சர்வதேச சதிவலையில் சிக்கியுள்ளது இலங்கை : கண்டுபிடித்தார் கம்மன்பில

சர்வதேச நாடுகள் பின்னியுள்ள சதிவலையில் இலங்கை அரசு சிக்கியுள்ளதாக பிவிருது ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆரூடம் கூறியுள்ளார்.

கொம்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கட்சியின் தலைவரும் மஹிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,
1998 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, இந்தனோசியாவுக்கு சர்வதேச நாடுகள் கடன் வழங்க முன்வந்து இந்தோனேசியாவிலிருந்து கிழக்கு தீமோரை பிரித்திருந்தன. அவ்வாறு இலங்கையின் பொருளாதாரத்தக்கு வேட்டு வைத்து சமஷ்டி அரசமைப்பொன்றை கொண்டுவருதற்கே ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு இரண்டு வருடகால கால அவகாசம் வழங்குப்பட்டுள்ளது.

இலங்கை மக்களினாலேயே சர்வதேச நீதிமன்றமொன்று வேண்டும், சமஷ்டித் தீர்வொன்று வேண்டும் என்று வலியுறுத்துவதற்கே இலங்கைக்கு இரண்டு வருட காலஅவகாசத்தை சர்வதேசம் வழங்கியுள்ளது.

சர்வதேச சதிவலையொன்று இலங்கைக்கு எதிராக பின்னப்பட்டுள்ளது. இலங்கை பாரிய பொருளாதார வீழ்ச்சியை நோக்கி பயணிக்கின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொக்க வேண்டும் என்ற சூழலும் உருவாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]