சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதன் முக்கியத்துவத்தை இலங்கையின் வீரர்கள் உணரவேண்டும் – லசித் மலிங்கா

நேற்று செஞ்சூரியனில் இலங்கை – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இது குறித்து அணித்தலைவர் லசித் மலிங்கா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதன் முக்கியத்துவத்தை இலங்கையின் வீரர்கள் உணரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 45.1 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 32.2 ஓவர்களில் 138 ரன்களுக்கு சுருண்டது.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தோல்விக்கு பின்னர் பேசிய இலங்கை அணித்தலைவர் மலிங்கா, முதல் 10 – 15 ஓவர்கள் வரை நாங்கள் சரியாக பந்துவீசவில்லை.

ஆனால் பின்னர் சிறப்பாக பந்துவீசி 251 ரன்களில் தென் ஆப்பிரிக்காவை ஆல் அவுட் ஆக்கினோம். பந்துவீச்சாளார்கள் சிறப்பாக செயல்பட்டாலும் அதை எங்களது பேட்ஸ்மேன்கள் புரிந்து கொள்ளவில்லை.

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் மதிப்பு எவ்வளவு பெரியது என்பதை நமது வீரர்கள் உணர வேண்டும்.

அவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பை உணர்ந்து அதற்கேற்றார் போல செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]