சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காணாமல் போனோர் தினம் இன்று (வியாழக்கிழமை) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

குறித்த தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பிரதேசங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் சமவுரிமை இயக்கத்தினால் தலைநகர் கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ‘நீதியை நிலைநாட்டு. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் தகவல்களை வெளிப்படுத்துமாறும்’ கோசங்களை எழுப்பி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர், கோட்டையில் இருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை லோட்டஸ் சுற்றுவட்டத்தில் பொலிஸார் தடுத்தி நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது.

மேலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச காணாமல்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]