சர்வதேச ஒருநாள் தொடரை சந்திக்க இலங்கை அணி அனைத்து வகையிலும் தயார்: தினேஷ் சந்திமால்

சர்வதேச ஒருநாள் தொடரை சந்திக்க இலங்கை அணி அனைத்து வகையிலும் தயார்: தினேஷ் சந்திமால்

இங்கிலாந்திற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை சந்திக்க இலங்கை அணி அனைத்து வகையிலும் தயாராகவிருப்பதாக இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு தம்மை உளரீதியாக வலுப்படுத்தும் எனவும் சந்திமால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் தொடர் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர் கூறுகையில், ‘இங்கிலாந்திற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடர் வீரர்களுக்கு சவாலானது. எனினும், சகல வீரர்களும் உளரீதியாக உயர்மட்டத்தில் இருக்கிறார்கள்.

இந்தத் தொடரை நாம் வெற்றிகரமாக நிறைவுசெய்தால், அது உலகக் கிண்ணத்தொடருக்கு எம்மை உளரீதியாக வலுப்படுத்தும். அதற்காக, வீரர்கள் மிகுந்த சிரத்தையுடன் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

எனவே எமக்குத் தேவையான பெறுபேற்றை நாம் பெற்றால் இந்தத் தொடர் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாய் அமையும்’ என தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]