சர்வதேச அளவில் 140 கோடி பேருக்கு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம்

சர்வதேச அளவில் 140 கோடி பேருக்கு கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கே கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உடற்பயிற்சி செய்யாவிட்டால் இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் புற்று நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச அளவில்

‘தி லான்சைட் குளோபல் ஹெல்த்’ என்ற அறிவியல் நாளிதழில் உலக சுகாதார நிறுவனம் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதில் வாரத்துக்கு குறைந்தது 150 நிமிடங்கள் நடை பயிற்சி, நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற சாதாரண உடற்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் சுமார் 75 நிமிட நேரம் கடினமான உடற்பயிற்சியான ஓடுதல், குழு விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சர்வதேச அளவில்

அத்தகைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததால் சர்வதேச அளவில் 140 கோடி ஆண்களும், பெண்களும் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளனர் என கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]