சர்வதேச அகிம்சை தினம் நேற்று யாழில் கொண்டாடப்பட்டது

காந்தி ஜெயந்தி தினமும் சர்வதேச அகிம்சை தினமும் நேற்று யாழில் கொண்டாடப்பட்டது.

அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகமும், வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இன்று காலை 8.30 மணியளவில், யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் உருச்சிலைக்கு இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலசந்திரன், வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்;னோல்ட் உட்பட அகில இலங்கை காந்தி சேவா சங்க உறுப்பினர்கள் ஆகியோர் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இதன்போது, மகாந்திக்கு மிகவும் பிடித்தமான ரகுபதி ராகவ ராஜாராம் பாடலும் பாடசாலை மாணவர்களினால் இசைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உட்பட பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினார்கள்.
மகாத்மா காந்தியின் 149வது பிறந்த தினமென்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]