சர்வதேசத்தின் தலையீடின்றியே தமிழருக்குத் தீவுர்

சர்வதேசத்தின் தலையீடின்றியே தமிழருக்குத் தீவுர் முன்வைக்கப்படும். பன்னாட்டு நீதிபதிகளை அனுமதிக்கின்றோமா இல்லையா என்பது அல்ல இப்போதுள்ள பிரச்சினை. தமிழர்களுக்கு விரைவில் நீதியைப் பெற்றுக் கொடுக்கின்றோமா என்பதுவே முக்கிய பிரச்சினை என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொன்டு உரையாற்றிய போது கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணையை நடத்தவுள்ள உள்ளகப் பொறிமுறையில் பன்னாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்படவேண்டும் என்று பன்னாடுகள் கோருவதன் அர்த்தம் எமது நீதித் துறையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதாகும்.

மகிந்தவின் 10 வருட ஆட்சியில் இடம்பெற்ற நிகழ்வுகளே இவ்வாறான கோரிக்கையை இன்று பன்னாடுகள் முன்வைக்கக் காரணம். அவரது ஆட்சியில் நீதித்துறை எவ்வாறு அரசியல்மயமாக்கப்பட்டிருந்தது என்பதை உலகம் அறியும். ஆனால்,இப்போது நீதித் துறை அரசியல் தலையீடு இன்றிச் சுதந்திரமாக இயங்கத் தொடங்கிவிட்டது. எதிர்காலத்தில் முன்பு போன்ற மோசமான நிலைமை ஏற்படாது. பன்னாட்டு நீதிபதிகளை உள்வாங்குவதா இல்லையா என்பது அல்ல இப்போதுள்ள பிரச்சினை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கின்றோமா இல்லையா என்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை.

நாம் நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்று கூறுவது வேறு நாட்டு மக்களுக்கு அல்ல. எமது நாட்டு மக்களின் ஒரு பகுதியினருக்குத்தான் இந்த நீதியைப் பெற்றுக் கொடுக்க முற்படுகின்றோம். இந்த நாட்டில் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பிரிவினருக்கான நீதியைப் பற்றியே நாம் பேசுகிறோம்.

அவர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். பல துன்பங்களை அனுபவித்தார்கள். உயிர்களை, உடமைகளை இழந்தார்கள் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதுதான் ஒரு ஜனநாயக அரசுக்கு அழகு.

சர்வதேசத்தின்

இந்த வடக்கு மக்களைப் பற்றி மாத்திரமன்றி அப்போது இதுபோல் தெற்கில் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றியும் பேசினோம்.தெற்கில் இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராகக் குரல் கொடுத்தோம். மகிந்த கூடத் தெற்கு மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். இப்போது மறந்துவிட்டார்.

தெற்கோ வடக்கோ எல்லோரும் இந்த நாட்டு மக்கள். அவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பது அவசியமாகும். அதைத்தான் நாம் செய்ய முற்படுகின்றோம். வடக்கு மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தல் என்ற பெயரில் நாம் வேறு யாரையும் பலிகொடுக்க முற்படவில்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

வடக்கில் உள்ள சில இனவாதத் தரப்பினர் மனித உரிமை மீறல் விசாரணையில் எப்படியாவது பன்னாட்டுத் தலையீட்டை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். நாம் பன்னாட்டுத் தலையீட்டுக்கான தேவையை ஏற்படுத்தாமல் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்த அரசுமீது நம்பிக்கை இன்றிக் காணப்படும் வடக்குகிழக்குத் தமிழர்களின் நம்பிக்கையை இதன்மூலம் வென்றெடுப்போம். அனைத்து தமிழருக்கும் நீதி கிடைக்கும்என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]