சர்வதேசத்திடம் நாட்டை அரசு காட்டிக்கொடுத்து விட்டது

ஜெனீவாவில் நடந்து முடிந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மைத்திரி ரணில் அரசு நாட்டை காட்டிக்கொடுத்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷ மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

மஹிந்த ராஜாபக்ஷ
மஹிந்த ராஜாபக்ஷ

 

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டுவருட கால அவகாசம் வழங்கும் தீர்மானத்திற்கு இணை அணுசரணை வழங்கியதன் ஊடாக சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் போர்க்குற்ற நீதிமன்றத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக போரை முடிவுக்கு கொண்டுவந்த படையினரை தண்டிக்க அரசு இணங்கியிருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குற்றம்சாட்டியுள்ளார்.

படையினரை தண்டிக்கவோ, வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்படவோ மாட்டார்கள் என ஜனாதிபதியும் பிரதமரும் தொடர்ச்சியாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கி வருகின்ற போதிலும் ஜெனீவாவில் நடந்தமுடிந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்திற்கு இணை அணுசரணை வழங்கியதன் ஊடாக அரசு நாட்டையும் நாட்டை மீட்ட படையினரையும் காட்டிக்கொடுத்துவிட்டதாக மஹிந்த ராஜபக்ஷ கடுமையாக சாடியுள்ளார்.

மஹிந்த ராஜாபக்ஷ
மஹிந்த ராஜாபக்ஷ

நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கி மேற்குலக நாடுகள் திருப்திபடக்கூடிய புதிய சட்டமொன்றை உருவாக்கவும் போர் குற்ற நீதிமன்ற விசாரணைகளை அனுமதிக்கவும் அதேபோல் மேற்குலக நாடுகள் வலியுறுத்தும் ஏனைய கட்டமைப்புக்களை நிறுவவும் அரசு ஜெனீவாவில் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் மஹிந்த குறிப்பிடுகின்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]