சர்வக்கட்சி சந்திப்பை புறக்கணிக்க தீர்மானம் – மக்கள் விடுதலை முன்னணி

இன்று மாலை ஜனாதிபதியுடன் நடைப்பெறவுள்ள சர்வக்கட்சி சந்திப்பினை புறக்கணிக்க  தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலை காரணமாக, கட்சிகளுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் சர்வகட்சி சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அண்மைய செயற்பாடுகள் திருப்தியளிக்காத நிலையிலேயே குறித்த கூட்டத்தினை புறக்கணிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]