ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் ‘சர்கார்’. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் இதற்கு முன்பு ’துப்பாக்கி’, ‘கத்தி’ என இரண்டு ப்ளாக் பஸ்டர் படங்கள் வெளிவந்தது.
இதனால், இவர்கள் கூட்டணியில் உருவாகி வரும் ‘சர்கார்’ பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. சமீப காலங்களில் விஜய் அவருடைய படங்களில் அரசியல் பஞ்ச்-களை தெறிக்க விடுகிறார். இந்நிலையில், ‘சர்கார்’ படம் அரசியலை மையப்படுத்தி இருப்பதால், அரசியல் வசனங்களுக்கு பஞ்சமே இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.
படத்தில் ராதாரவியும், பழ.கருப்பையாவும் அரசியல்வாதிகளாக நடிக்கிறார்கள். மேலும், வரலட்சுமி சரத்குமார் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கெனவே அனைவரும் அறிந்ததே. விஜய்-க்கு இவர்தான் வில்லன் என்று நினைத்திருந்த நிலையில், இப்போது புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அது என்னவென்றால், ’சர்கார்’ படத்தில் விஜய்-க்கு புதிய வில்லனை அறிமுகப்படுத்தியதுதான். அவர் பெயர் ஜானி ட்ரி ந்குயென்; இவர் யார் தெரியுமா..?
இவர், தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ஏழாம் அறிவு’ படத்தில் டாங் லீ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியவரேதான். இந்தப் படத்தை இயக்கியவரும் ஏ.ஆர்.முருகதாஸ்தான். அடுத்து, அதர்வா நடிப்பில் வெளிவந்த ‘இருப்பு குதிரை’ படத்திலும் திறம்பட நடித்திருப்பார். இந்த இரண்டு படங்களிலும் சண்டைக்காட்சிகளில் ஹாலிவுட் தரத்தில் இருக்கும். ஏனென்றால், ஜானி ஒரு தேர்ந்த ஸ்டண்ட் கலைஞர்; இவர் மட்டுமல்ல இவர் தந்தை, தாத்தா போன்றோரும் ஸ்டண்ட் கலைஞர்தான்.
இந்நிலையில், ’சர்கார்’ படத்தில் விஜய்-க்கு வில்லனாக இவரை கமிட் செய்திருப்பது, உச்சபட்ச பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாகவே விஜய், சண்டைக் காட்சிகளில் பட்டய கிளப்புவார்; இதில், ஜானியும் இணைகிறார் என்றால் சொல்ல வேண்டுமா..? அனைத்து சண்டைக் காட்சிகளும் தாறுமாறாக இருக்கும் என்று நம்பலாம்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]