சர்க்கார் படத்தின் வரலக்ஷ்மியின் ரோல் இதுதானாம்

அட்லியின் ‘மெர்சல்’ படத்திற்கு பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்தில் ‘தளபதி’ விஜய் நடித்து வருகிறார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நெகட்டிவ் ஷேடில் நடிக்கின்றனராம்.‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெறுகிறது. சமீபத்தில், விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட படத்தின் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. இந்நிலையில், படத்தில் வரலக்ஷ்மி முதலமைச்சரின் மகளாக வலம் வரப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]