சர்கார் படத்தை தொடர்ந்து முக்கிய நடிகரோடு இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்

சர்கார் படத்தை தொடர்ந்து முக்கிய நடிகரோடு இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிற நிலையில், விரைவில் இறுதிகட்டத்தை எட்டும் என கூறப்படுகின்றது.

இதன் பின்னர் ரஜினிகாந்த் முழு நேர அரசியலில் ரஜினி ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுத்த படத்தின் கதையையும் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிற நிலையில், இந்த படம் வெளியான பின்னர் ரஜினி படத்திற்கான வேலையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ரஜினி அடுத்து வெளியாக இருக்கும் 2.0 படத்தின் ரிலீசுக்கான முழு வேலைகளில் கவனம் செலுத்த வருவதாகவும் இந்திய சினிமா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]