சர்கார் படத்திற்கு தடையில்லாத சான்றிதழ்: மகிழ்ச்சியில் படக்குழு

சர்கார் படத்திற்கு தடையில்லாத சான்றிதழ்: மகிழ்ச்சியில் படக்குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

மேலும் வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு பிரமாண்டமாக வரவுள்ள நிலையில், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்றது.

இந்த படத்தின் பாடல்கள் அக்டோபர் 2ஆம் திகதி வெளிவரவுள்ள நிலையில், சிங்கிள் ட்ராக் எதிர் வருகின்ற செப்டம்பர் 24ஆம் திகதி வரவுள்ளது.

இதற்கிடையில் இப்படத்திற்கு விலங்குநல வாரியம் எந்த தடையும் விதிக்காமல் சான்றிதழ் கொடுத்துள்ளதால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் உள்ளது.

ஏனெனில் மெர்சல் படத்திற்கு இதே வாரியம் பெரும் பிரச்சனை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]