சர்கார் படத்தின் வசூல் கஜா நிவாரணத்திற்கு வழங்கப்படும்?

தீபாவளி தினத்தன்று வெளியாகி இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விஜயின் சர்கார்.

இந்நிலையில், தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். நடிகர் விஜய் கூட தன் மக்கள் இயக்கம் மூலம் உதவி நேரடியாக சென்று சேரும்படி செய்துள்ளார்.

சர்கார் படத்தின் அமெரிக்க விநியோகஸ்தர் கஜா புயலுக்கு உதவுவதற்காக சர்கார் படத்தின் ஒரு நாள் வசூல் முழுவதும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அது குறைந்தது 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]