‘சர்கார்’ படத்தின் புதிய லுக் போஸ்டர் வெளியானது- ரசிகர்கள் கொண்டாட்டம்

ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் புதிய லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

துப்பாக்கி, கத்தி திரைப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகிபாபு, பழ.கருப்பையா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பிரம்மாண்டமாக உருவாகிவரும் இத்திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இசைவெளியீட்டு விழா வருகின்ற அக்டோபர் 2ம் தேதி அன்று சென்னையில் நடைபெறுகிறது.

முன்னதாக வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. விஜய் புகைப்பிடிப்பு போன்று வெளியான போஸ்டர் பெரும் சர்ச்சைய கிளப்பியது. தொடர்ந்து புகைக்கும் போஸ்டருக்கு எதிராக பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனங்கள் வெளியானதால், அந்த போஸ்டரை நீக்கியது படக்குழு.

'சர்கார்' படத்தின்

சர்காரின் முதல் கொண்டாட்டமாக சில தினங்களுக்கு முன்பு சிம்டாங்காரன் பாடல் வெளியானது. சென்னை தமிழில் லோக்கலாக அமைந்திருந்த இப்பாடல் விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. இந்நிலையில் சர்காரின் மற்றொரு கொண்டாட்டமாக படத்திலிருந்து புதிய லுக் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இசைவெளியீட்டு விழா வருகின்ற அக்டோபர் 2ம் தேதி வெளியாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் போன்றே இதிலும் விஜய் மடிக்கணினியை வைத்துக்கொண்டு கெத்தாக நிற்கிறார். அசத்தலாக இருக்கும் இந்த புதிய லுக் போஸ்டரினை ரசிகர்கள் ஆவலுடன் பகிர்ந்து வருகின்றனர்.

site – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]