சர்கார் திரைப்படத்தின் நடனக்காட்சி லீக் ஆனது

சர்கார் திரைப்படத்தின் நடனக்காட்சி லீக் ஆனது, படக்குழுவினரை பெரும் வருத்ததிற்கு உள்ளாக்கியுள்ளது.

தளபதி விஜய்யின் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே பாரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்தவகையில், ‘சர்கார்’ திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது.

எனவே ‘சர்கார்’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், உலகம் முழுவதும் ரூ 100 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது

இப்படியிருக்க விஜய் படங்களின் போஸ்டர், டீசர் என எப்போது லீக் ஆகும் என எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு, தற்போது சர்கார் படத்தில் அமெரிக்காவில் எடுத்த நடனக்காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகின்றது.

பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் காட்சிகளை இப்படி லீக் செய்து, அதன் சர்ப்ரைஸை குறைப்பது படக்குழுவிற்கு பெரும் வருத்ததை அளித்துள்ளது.

மேலும் ஒருபக்கம் இந்த வீடியோ வைரலாகி வந்தபோது, ரசிகர்கள் யாரும் படப்பிடிப்பில் வீடியோக்கள் எடுக்கவேண்டாம் என படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

சர்கார் திரைப்படமானது, இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வருகின்றது. இப்படத்தில் தளபதி விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகின்றார்.

அத்தோடு வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]