சர்காருக்கு U/A சான்றிதழ்- உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சர்கார் திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சென்சாருக்கு சென்ற சர்கார் திரைப்படத்திற்கு, யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.இந்தத் தகவலை விஜய்யின் செய்தித் தொடர்பாளர் அவரது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி, கத்தி ஆகியப் படங்களைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சர்கார் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலக்‌ஷ்மி சரத்குமார், ராதா ரவி, பழ.கருப்பையா, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின், போஸ்டர், ஸ்டில்ஸ், பாடல்கள், டீசர் என அனைத்தும் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கும் நிலையில், தற்போது சர்காரின் ட்ரைலருக்காக தளபதி ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத் தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]