சர்­வ­தேச நாடு­களின் மத்­தியில் இலங்கை மீதி­ருந்த களங்­கத்தை முற்­று­மு­ழு­தாக போக்­கி­யுள்ளேன் – ஜனா­தி­பதி

சர்­வ­தேச நாடு­களின்சர்­வ­தேச நாடு­களின் மத்­தியில் இலங்கை மீதி­ருந்த களங்­கத்தை முற்­று­மு­ழு­தாக போக்­கி­யுள்ளேன். ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் மற்றும் மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யாளர் உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­களின் தலை­வர்கள் பல­ரையும் சந்­தித்து எமது நாட்டின் நல்­லி­ணக்கம் சக­வாழ்வு மற்றும் ஐக்­கியம் தொடர்பில் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கிறேன்.

ஆதலால் எமது நாட்டின் அபி­வி­ருத்தி தொடர்­பி­லான எனது கோரிக்கை உலக தலை­வர்­களால் முழு­ம­ன­துடன் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

பதுளை மாவட்டம் முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களால் புறக்­க­ணிப்­பட்­டி­ருப்­பது உண­ரப்­பட்­டி­ருக்­கி­றது. ஆதலால் எமது அர­சாங்கம் பதுளை மாவட்­டத்தின் மீதும் அதிக கவனம் செலுத்தி அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது என்றும் ஜனா­தி­பதி கூறினார்.சர்­வ­தேச நாடு­களின்

பதுளை மாவட்­டத்­திற்­கான குடிநீர் விநி­யோகத் திட்­டத்தை ஆரம்­பித்து வைத்த ஜனா­தி­பதி பது­ளையில் 250 வாக­னங்கள் தரித்து நிற்­கக்­கூ­டிய வாகன தரிப்­பி­டத்­தையும், சமிக்ஞை வர்ண திட்­டத்­தையும் நேற்று அங்­கு­ராப்­பணம் செய்து வைத்தார். அத்­துடன் 302 பேருக்­கான பட்­ட­தாரி அரச நிய­ம­னங்­க­ளையும் ஜனா­தி­பதி வழங்­கினார். இதன்­போது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஐனா­தி­பதி தலை­மை­யி­லான நேற்­றைய நிகழ்­வு­களின் போது அமைச்­சர்­கான ஹரின் பெர­னாண்டோ ரவூப் ஹக்கீம் முத­ல­மைச்சர் சாமர சம்பத் தச­நா­யக்க ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அ.அர­விந்த குமார் வடிவேல் சுரேஸ் மற்றும் மாகாண சபை உறுப்­பினர் அரச அதி­கா­ரிகள் உள்­ளிட்ட பலரும் கலந்து கொண்­டனர்.

ஜனா­தி­பதி தொடர்ந்து பேசு­கையில்,

நாட்டை துரித அபி­வி­ருத்தி செய்ய வேண்­டு­மானால் ஸ்திர­மான அர­சியல் சூழல் மற்றும் சர்­வ­தேச நாடு­களின் ஒத்­து­ழைப்பு மேலோங்க வேண்டும். இதற்­க­மைய எமது பாரா­ளு­மன்­றத்­திலும் 2- 3 அதிகப் பெரும்­பான்மை அர­சியல் பலமும் எமக்­கி­ருப்­ப­துடன், சர்­வ­தேச நாடு­களின் பூரண ஒத்­து­ழைப்­புக்­களும், ஆத­ரவும் எமது நாட்­டிற்கு இருந்து வரு­கின்­றன. சர்­வ­தேச நாடு­களில் எமது நாட்டைப் பற்­றி­யி­ருந்த களங்­கத்தை, நான் முற்­று­மு­ழு­தாக போக்­கி­யுள்ளேன். ஐ.நா. செய­லாளர், மனித உரிமை ஆணை­யாளர் உள்­ளிட்டு சர்­வ­தேச நாடு­களின் முக்­கிய தலை­வர்கள் பல­ரி­டமும் நான் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்டு, நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் நல்­லி­ணக்கம், சக­வாழ்வு, ஐக்­கியம் தொடர்­பான விட­யங்­களை தெ ளிவு­ப­டுத்­தினேன். எனக்கு கிடைத்­தி­ருந்த வாய்ப்­புக்­களை நன்கு பயன்­ப­டுத்­திக்­கொண்டேன். அத்­துடன் எமது நாட்டின் மேம்­பா­டு­களை கருத்­திற்­கொண்டு உத­வி­களை வழங்­கு­மாறு உலகத் தல­வைர்­க­ளிடம் என்னால் விடு­விக்­கப்­பட்ட கோரிக்­கைகள் முழு மன­துடன் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.சர்­வ­தேச நாடு­களின்

ஆகை­யினால், எமது நாட்டின் அபி­வி­ருத்­தியை துரி­த­மாக மேற்­கொள்­வ­தற்கு எந்­த­வொரு தடையும் தற்­போது இல்லை. எமது நாட்டில் வரட்சி, வௌ்ளம் போன்ற இயற்கை சீற்­றத்­தினால் எமது மக்கள் சொல்­லொண்ணாத் துய­ரங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். இதனை கருத்­திற்­கொண்டும், உணவு உற்­பத்­தியை அதி­க­ரிக்கும் முக­மா­கவும் எதிர்­வரும் 6ந் திகதி முதல் 11ந் திகதி வரைக்­கு­மான வாரத்தை உணவு உற்­பத்தி வார­மாக பிர­க­டனம் செய்­துள்ளேன். இதன் ஆரம்ப நிகழ்வு மாத்­தளைப் பகு­தியில் தம்­புள்ளை என்ற இடத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

எமது நாட்டு மக்­களின் நீண்­ட­கால வர­லாற்­றினைப் பின்­னோக்கிப் பார்ப்­போ­மே­யானால், அது ஒரு போராட்ட வர­லாற்­றுக்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தி­ய­தா­கவே அமைந்­தி­ருந்­தது. கால­ணித்­துவ ஆட்­சி­யா­ளர்கள், ஆங்­கி­லேயர் ஆட்சி, 30 வரு­டங்­க­ளுக்கு மேலான கொடூர யுத்தம், வறுமை, வரட்சி, வௌ்ளம் போன்ற இயற்கை சீற்றம் என்­ப­வற்றைக் குறிப்­பி­டலாம். இவற்­றினை எமது மக்கள் போராட்­டங்­களை மேற்­கொண்டே வெற்றி கொண்­டுள்­ளனர்.

இனிமேல், இந்­நாட்டில் யுத்தம் ஏற்­பட வாய்ப்பே இல்லை. இந்­நாட்டில் வாழும் அனைத்து அனைத்து இனங்­களைக் கொண்ட மக்­களும் நல்­லி­ணக்கம், சக­வாழ்வு ஆகி­ய­வற்றை முன்­னி­லைப்­ப­டுத்­தியே செயல்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றனர். தேசிய கட்­சி­களும் ஒன்­றி­ணைந்த வகையில் செயல்­ப­டு­கின்­றன. இத்­த­கைய நிலை­யினால் சமூ­கங்­க­ளுக்­கி­டையில், இனங்­க­ளுக்­கி­டையில், அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டையில் ஐக்­கியம், சக­வாழ்வு, நல்­லி­ணக்கம் மேலோங்கி வரு­கின்­றது.சர்­வ­தேச நாடு­களின்

பதுளை மாவட்டம் என்­பது கமத்­தொழில், விவ­சாயம், பெருந்­தோட்டத் தொழில் துறை ஆகி­ய­வற்றை முதன்­மை­ப­டுத்­து­கின்­றன. இம் மாவட்­டத்தில் வாழ்ந்து வரும் மக்­களும் பெரும் வசதி படைத்­த­வர்­க­ளாக இல்­லா­துள்­ளனர். மாவட்­டத்தில் பல்­வேறு குறை­பா­டுகள் மலிந்து காணப்­ப­டு­கின்­றன. இவற்றை தற்­போ­தைய அரசு நிவர்த்தி செய்து வரு­கின்­றது என்றார்.

ஊவா மாகாண முத­ல­மைச்சர் சாமர சம்பத் தச­நா­யக்க பேசு­கையில், மத்­திய அர­சுடன் இணைந்த வகையில், ஊவா மாகாண சபை செயற்­பட்டு வரு­கின்­றது. இந் நாட்­டி­லேயே ஏனைய மாகாண சபை­களை விட ஆகக்­கூ­டு­த­லான அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்ட வகையில், ஆகக்­கூ­டு­த­லாக அரச நிய­ம­னங்­களை வழங்­கிய வகை­யிலும், எமது ஊவா மாகாண சபையே முன்­ன­னி­யி­லுள்­ளது. இக்­கு­று­கிய காலத்­திற்குள் இரண்­டா­யிரம் பட்­ட­தா­ரி­க­ளுக்கு தொழில் வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­துள்ளோம் என்றார்.

அமைச்சர் ஹரீன் பெர்ணன்டோ தமதுரையில், பதுளையில் அபிவிருத்தி குறித்து பார்ப்போமேயானால், அது அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வாவினால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அது போன்று, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோரும் பெரும் சேவைகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், மேற்கூறப்பட்டவர்கள், நான் சார்ந்த கட்சியைச் சாராத விடத்திலும், அவர்கள் பாரிய வேலைத்திட்டங்களை செய்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில், மக்கள் என்னை விமர்சித்த வண்ணமேயுள்ளனர் என்றார்.

சர்­வ­தேச நாடு­களின் சர்­வ­தேச நாடு­களின் சர்­வ­தேச நாடு­களின் சர்­வ­தேச நாடு­களின் சர்­வ­தேச நாடு­களின் சர்­வ­தேச நாடு­களின் சர்­வ­தேச நாடு­களின் சர்­வ­தேச நாடு­களின்