சர்­வ­தே­சத்­த­வர்கள் பக்­கச்­சார்­பா­கவே செயற்­பட்டு வரு­கின்­றனர் – மஹிந்த ராஜ­பக்ஷ

சர்­வ­தே­சத்­த­வர்கள் பக்­கச்­சார்­பா­கவே செயற்­பட்டு வரு­கின்­றனர். விடு­தலை புலிகள் இயக்­கத்தை தொடர்ந்து பாது­காப்­பதே இவர்­க­ளது தேவை­யாக உள்­ளது. விடு­தலை புலி­களை தவிர ஏனை­ய­வர்­க­ளுக்கு நேர்ந்த அநீதி தொடர்பில் ஆராய்­வது கிடை­யாது என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் எமது கட்சி வெற்றி வாகை சூடு­வ­தற்­கான வாய்ப்­புகள் தோன்­றி­யுள்­ளன. அத்­துடன் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு கண் தெரியும். எனினும் அர­சாங்கம் தரப்­பு­களின் குற்­றங்கள் கண்­ணுக்கு தெரி­வது கிடை­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் அமைந்­துள்ள கால்டன் வீட்டில் வைத்து உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­விற்கு ஆத­ரவு வழங்க முன்­வந்­த­வர்­க­ளு­ட­னான சந்­திப்­பினை அடுத்து ஊடங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன வெற்றி வாகை சூடு­வ­தற்­கான வாய்ப்­புகள் தோன்­றி­யுள்­ளன. ஏனெனில் எமது கட்­சியில் போட்­டி­யி­டு­வ­தற்­கான விண்­ணப்­பங்கள் அதி­க­ரித்த வண்­ண­முள்­ளன. அது தற்­போது எமக்கு பிரச்­சி­னை­யாக மாறி­யுள்­ளது.

அத்­துடன் தேர்­தலை இலக்­கு­வைத்து அர­சாங்க தரப்­பினால் பல பொருட்கள் மக்­க­ளுக்கு விநி­யோகம் செய்­யப்­ப­டு­கின்­றன. இது அம்­பாந்­தோட்­டையில் தான் அதி­க­மாக உள்­ளது. ஏனைய இடங்­க­ளிலும் இவ்­வா­றான செயற்­பா­டுகள் தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­கின்­றன.

தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு இது தெரி­வது இல்லை. இவ்­வா­றான காணொ­ளிகள் தொலைக்­காட்­சியில் ஒளிப்­ப­ரப்பு செய்­யப்­பட்­டன. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரிடம் அவ­தா­னத்­திற்கு கொண்டு வந்தோம். இதனை அவர் பார்க்­க­வில்லை என்றே எம்­மிடம் கூறினார். அவ­ருக்கு கண் தெரியும். எனினும் அர­சாங்கம் சார்ந்த குற்­றங்கள் கண்­ணுக்கு தெரி­வது குறை­வாகும்.