சரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் கொய்யா இலை

கொய்யா இலைகளை பயன்படுத்தி பல்வேறு விதமான சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

* சருமத்தில் நமைச்சல், ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்பட்டால் கொய்யா இலைகளை பயன்படுத்தி பாதிப்பை சரிபடுத்திவிடலாம். சருமத்தில் ஏற்படும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து சரும பாதிப்புக்குள்ளான இடங்களில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

* இயற்கையாகவே சருமத்திற்கு அழகிய நிறத்தை கொடுக்கும் தன்மை கொய்யா இலைகளுக்கு உண்டு. கொய்யா இலைகளை மிக்சியில் அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் பூசி வரலாம். அவை நன்கு உலர்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பாக இவ்வாறு செய்து வந்தால் சருமம் புது பொலிவு பெறும்.

* கோடை காலங்களில் சருமம் கருமை நிறத்திற்கு மாறத்தொடங்கும். கொய்யா இலைகளை பயன்படுத்தி கருமை நிற முகத்தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி வர வேண்டும். அது முகத்தில் உள்ள துளைகளில் படிந்திருக்கும் அழுக்கை அப்புறப்படுத்தி பளிச்சிட வைக்கும்.

* கொய்யா இலைகளை அரைத்து அடிக்கடி முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகப்பரு பிரச்சினையும் நீங்கும். சரும சுருக்கங்களை போக்கி இளமையை பாதுகாக்கவும் கொய்யா இலை உதவும்.

* அரைத்த கொய்யா இலையுடன் ரோஸ் வாட்டர், முல்தானி மெட்டி கலந்து முகத்தில் பூசி வரலாம். இவ்வாறு தினமும் செய்துவந்தால் சருமத்தில் அழுக்கு படிவதை தவிர்த்துவிடலாம். சருமத்திற்கு கூடுதல் அழகும் சேர்க்கலாம்.

* பொடுகு பிரச்சினையால் அவதிப்படு பவர்கள் கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தலையில் தேய்த்து குளித்து வரலாம். இதன் மூலம் முடி உதிர்வு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

* எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கொய்யா இலைகளை பேஸ்ட் செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வர வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தினமும் இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]