சரித்திர படத்தில் ஒப்பந்தமான அமீர்கான்-பிரபாஸ்

பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் கவனம் புராண மற்றும் சரித்திர கதைகள் பக்கம் திரும்பி இருக்கிறது.

அந்த வரிசையில் பிரபல பொலிவுட் நடிகர் அமீர்கானும், பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸும் ரூ.1000 கோடியில் உருவாகும் சரித்திர கதையில் நடிக்க இருக்கிறார்கள்.

அதாவது மகாபாரதம் கதையை படமாக்க திட்டமிப்பட்டுள்ளதோடு, இதனை இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் படமாகவுள்ளனர்.

ரூ.1000 கோடி செலவில் தயாராகும் இப்படத்திற்கு கர்ணன், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன், துரியோதனன், சகுனி, திரவுபதி உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களுக்கு நடிகர்–நடிகைகள் தேர்வு நடக்கிறது.

அமீர்கானை முக்கிய கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ள படக்குழுவினர், அர்ஜுனன் வேடத்தில் நடிக்க பாகுபலி படம் மூலம் பிரபலமான பிரபாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]