சரத் குமார குணரத்ன உள்ளிட்ட ஆறு பேருக்கு பிணை

முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவர்களை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போதே தலா 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் சரீரப்பிணைகளில் 06 சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த வழக்கினை எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 10 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதியை முறைகேடாக பயன்படுத்தி நாட்குறிப்பு புத்தகங்கள் அச்சிட்டு விநியோகித்ததாக அவருக்கெதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]