‘சரண குணவர்தன’வுக்கு எதிரான பிடியாணை இரத்தானது

சரண குணவர்தன

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ‘சரண குணவர்தன’வை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை இரத்துசெய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டது.

சரண குணவர்தன வழக்கறிஞர் ஊடாக நீதிமன்றத்தில் இன்று ஆஜரான போது கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா லக்மாலி இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.

வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கவும் மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சரண குணவர்தன, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றிய காலத்தில் வாடகைக்கு வாகனங்களை பெற்றுக்கொண்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]