போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலையும், அவர்கள் பற்றிய தகவலையும் வெளியிடுமாறு அனைத்துலக மன்னிப்புச்சபை, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு பாதுகாப்புச் சபைக்கு உத்தரவிடுவதாக கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூன் மாதம், மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்தாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு குறித்த வாக்குறுதி அளிக்கப்பட்டு 11 மாதங்களாகியும், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்தவர்களின் படடியல் இன்னமும் வெளியிடப்படவில்லை என, என்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]