சயிட்டத்திற்கு பதிலாக இலாப நோக்கமின்றி புதிய நிறுவனம்

சயிட்டத்திற்கு பதிலாக இலாப நோக்கமின்றி புதிய நிறுவனம்

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியைமாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை இரத்துச் செய்து, அதனை இலாப நோக்கமற்ற புதிய நிறுவனமாக நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி இன்று (29) கலைக்கப்படுவதாகவும், அதனை சட்ட ரீதியாக இலாபம் ஈட்டாத நிறுவனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சைட்டம் நிறுவனத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள மாணவர்கள் அரச வைத்தியசாலைகளில் பயிற்சிகளைப் பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், சைட்டம் நிறுவனத்திற்கு புதிதாக மருத்துவ மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நிறுவனம் உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் கண்காணிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]